நாஸாவின் திடீர் தீர்மானத்தினால் இறுதிநேரத்தில் இரத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க விண்வெளிச் சாகச முயற்சி….!!

விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லாததால், வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ரத்து செய்துவிட்டது.கிறிஸ்டினா கோச் மற்றும் ஆனி மெக்கிளேன் ஆகிய பெண் விண்வெளி வீராங்கனைகள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே சென்று மின்கலன்களை பொருத்த வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு, அந்த விண்வெளி வீராங்கனைகள் அணிகின்ற மத்தியதர அளவிலான விண்வெளி உடை இரண்டு தேவைப்பட்டது. ஆனால், இருந்ததோ ஒன்றுதான்.எனவே, ஆண் விண்வெளி வீரர் நிக் ஹேக்கோடு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கோச் வெளியேறி இந்த பணியை செய்திருக்கிறார்.

மெக்கிளேனால் பயன்படுத்தப்பட்ட விண்வெளி உடையை அணிந்து கொண்டு கோச், ஹேக்கோடு கடந்த வாரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.மெக் க்ளேன் மத்தியதர மற்றும் பெரிய அளவிலான விண்வெளி ஆடையை அணிந்து பயிற்சி எடுத்துக் கொண்டார். ஆனால் ,விண்கலத்தை விட்டு நடக்க அவர் தயார் ஆன பிறகு அவருக்கு மத்தியதர உடையே பொருத்தமானது என்று தெரியவந்தது என நாசா தெரிவித்துள்ளது.

அவர் வரும் ஏப்ரல் 8ஆம் திகதி மற்றொரு ஆண் விண்வெளி வீரருடன் இணைந்து விண்கலத்தை விட்டு வெளியே செல்லும் நடவடிக்கையை மேற்கொள்வார்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா இரண்டே இரண்டு மத்தியதர அளவிலான உடைகளையே வைத்துள்ளது அதில் ஒன்றுதான் விண்கலனைவிட்டு வெளியே செல்வதற்கு ஏதுவானது.

மற்றொன்றைப் பெறுவதற்கு சில மணி நேரங்கள் பிடிக்கலாம். ஆனால் நாசா விண்வெளி வீரரை மாற்றுவது எளிதானது பாதுகாப்பானது என்று முடிவு செய்தது.

ஹூஸ்டனின் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின் செய்தித் தொடர்பாளர், விண்வெளி வீரர் விண்வெளியில் இருக்கும் அவர்களின் அளவில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்