நுவரெலியாவில் சற்று முன்னர் பயங்கர விபத்து – 50 பேர் படுகாயம் – பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

வலப்பனை – நுவரெலியா வீதியில் சற்று முன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வலப்பனை – நுவரெலியா வீதியில் மஹாவுலவத்தை கோயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராகலையிலிருந்து வலப்பனை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று மாஹா ஊவா பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் குறைந்தபட்சம் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.அம்பாறையிலிருந்து சுற்றுலாவிற்காக பயணித்த பஸ் ஒன்றே, வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வலபனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து காரணமாக பல உயிர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்