1980 ஆம் ஆண்டிற்குப் பின் இன்று இலங்கையில் நடந்த அதிசயம்…!! 8000 அடி உயரத்திற்கு மேல் பறந்து சாதனை…!!

மவுசாகலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பிரதேசத்தில் செயற்கை மழை பெய்ய வைக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மின்சாரசபை இன்று ஆரம்பித்துள்ளது.இலங்கை விமானப்படையின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை விமானப்படைக்கு சொந்தமான வை 12 ரக விமானம் மூலம் மவுசாகலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 8000 அடி உயரத்திற்கு சென்று மேகங்கள் மீது இரசாயனம் தெளிக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட வை 12 ரக விமானம் வானத்தில் 8 அடி உயரத்தில் மேகங்களுக்கு மேலாக 45 நிமிடங்கள் செயற்கை மழையை பொழிய செய்ய இரசாயனத்தை தூவியதாக விமானப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சாரசபையின் கோரிக்கைக்கு அமைய தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விசேட பொறியியலாளர்கள் குழு செயற்கை மழையை பொழிய திட்டத்தை ஆரம்பித்தனர்.இதற்கு முன்னர் 1980ஆம் ஆண்டு காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்க பகுதிகளில் செயற்கை மழையை பெய்ய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்