இந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்… நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம் எதிர்பாலினத்தைச் சேர்ந்த மக்களால் உங்களுக்கு பெரும் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய வாக்குறுதிகளை தேவையில்லாமல் யாருக்கும் கொடுக்காமல் இருப்பது நல்லது. செய்கின்ற காரியங்களில் கொஞ்சமும் பதட்டம் இன்றி செயல்படுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். அது உங்களுக்கு நன்மையையே தரும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்குப் பண உதவி கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வம் உண்டாகும். சின்ன பயணம் மேற்கொள்வதன் மூலமாக உங்களுக்குப் பெரும் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம் உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கிடைக்கப் பெறுவீர்கள். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பாராத சுப விரயச் செலவுகள் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம் உங்களுடைய குண நலன்களில் பெரிய மாற்றங்கள் உண்டாகும். வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வியாபாரங்களில் புதிய அணுகுமுறைகளின் மூலமாக உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். மனதுக்குள் பெரும் தன்னம்பிக்கையுடன் நீங்கள் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலமாக உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம் முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை ஓரளவுக்குக் குறைய ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த மன வருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். இதுவரையிலும் தடைபட்டு வந்த வேலைகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுடைய செயல்களை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். விளையாட்டு வீரர்களுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்

சிம்மம் உங்களுடைய வியாபாரத்தின் வாயிலாக நீங்கள் நினைத்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகளில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் இருக்கின்றன. உங்களுடைய வுலைகளை விரைந்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வெளிவட்டாரத் தொடர்புகள் உங்களுடைய தொழிலுக்கு பெருந் துணையாக அமையும். பெரிய மகான்களுடைய அறிமுகமும் ஆசிகளும் கிடைக்கும். கடல் சார்ந்த பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கின்றவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம் உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உருவாகும். உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களின் மூலம் உங்களுக்கு ஆதாயமான சூழல்கள் உருவாகும். தொழிலில் கொடுக்கல், வாங்கலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உறவினர்களின் மூலம் உங்களுக்கு மேன்மை உண்டாகும். உங்களுடைய மேலதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம் பெற்றோர்களின் வழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும். வாகனங்களில் பயண்ஙகள் செய்கின்ற பொழுது சின்ன சின்ன காரியத் தடைகள் ஏற்படும். வேகமாக முடியும் என்று நீங்கள் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேற கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்கின்ற வேலை எதுவாகினும் அதை கொஞ்சம் கவனத்துடன் செய்யவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

தனுசு குடும்ப உறுப்பினர்களின் மூலமாக உங்களுக்கு கலகலப்பான சூழல்கள் உருவாகும். வீடு மற்றும் மனை விருத்திக்கான கடன் உதவிகளைப் பெறுவீர்கள். உங்களுடைய தொழில் திறமையினால் அனைவராலும் பெரும் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் உங்களுடைய வாடிக்கையாளர்களால் தொழிலில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். மனதுக்குள் உள்ள கவலைகள் தீரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

மகரம் முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களிடம் பேசி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வீர்கள். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

கும்பம் மனதுக்குள் பல்வேறு விதமான சிந்தனைகள் தோன்றி மறையும். இன்று சந்திராஷ்டம தினம் என்பதினால் மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களிடம் வேலை செய்கின்ற வேலையாட்களிடம் கொஞ்சம் அமைதியுடன் செயல்படுவது நல்லது. உங்களுடைய தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்களுடைய முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மீனம் பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய வியாபாரத்தில் பெரும் லாபம் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் அனைவரையும் கவர்வீர்கள். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகளுக்குச் சாதகமாக செயல்படத் துவங்குவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளில் வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்