சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேற்றிற்காக காத்திருந்த மாணவன் சடலமாக மீட்பு…!!

மலையகம் நாவலப்பிட்டியில் கடந்த 5 நாட்களாக காணாமல் போயிருந்த பாடசாலை மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் அருகிலுள்ள கற்குகையில் இருந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நாவலப்பிட்டி மாபகந்த பிரதேசத்தை சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 17 வயதான மாணவனின் சடலமே இவ்வாறு கிடைத்துள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கு காத்திருந்த பாடசாலை மாணவன் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக பெற்றோர் நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நடத்திய தேடுதலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மாணவனின் பிரேத பரிசோதனை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்