வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு பேர் படுகாயம்…!

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து, கொழும்பு நோக்கி இன்று பயணித்த கயஸ் வாகனமொன்று வேக கட்டுப்பாட்டையிழந்து பனை மரத்துடன் மோதுண்டதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்