திருகோணமலை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி திரியாய் சந்தியில் மொரவெவ பிரதேச சபை தவிசாளரின் கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சிவில் பாதுகாப்பு படை வீரரான மஹதிவுல்வெவ – தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஜனஜீவ சம்பத் (29 வயது) எனும் காரின் சாரதியே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹதிவுல்வெவ பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்