இலங்கையில் பெரும் நெருக்கடியாக மாற்றம் பெறும் வரட்சி….!! மாயாஜாலங்கள் நிகழ்த்தப் போகும் தாய்லாந்து…!

இலங்கையில் வரட்சியான காலநிலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் செயற்கை மழையை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் வாரத்தில் செயற்கை மழையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்திக்கு பாரிய சிக்கில்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தாய்லாந்தின் உதவியுடன் செயற்கை மழையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்