வாகன விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… !! யாழில் நடந்த பரபரப்புச் சம்பவம்..!

யாழ்ப்பாணத்தில் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் வைத்திருந்த கைப்பையினுள் ஒரு தொகுதி கஞ்சா இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில், கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கைப்பையைப் பரிசோதனை செய்த போது கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிமன்ற பதில் நீதிவான், விபத்து தொடர்பாகவும் கஞ்சா மறைத்து வைத்திருந்தமை தொடர்பாகவும், தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்