”ஆண்கள் வாடகைக்கு” மன அழுத்தத்தில் உள்ள பெண்களுக்காக புதிய ஆப் அறிமுகம்!

மன அழுத்தத்தில் உள்ள பெண்கள், ஆண்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதியையுடைய புதிய ஆப் ஒன்றை முன்பையைச் சேர்ந்த ஒருவர் உருவாக்கியுள்ளார்.மும்பையைச் சேர்ந்தவர் குஷால் பிரகாஷ் என்கிற இளைஞர். இவர் ஆர்.ஏ.பி.எப் (RABF) என அழைக்கப்படும் புதிய ஆப் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்காக இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆண்களை இந்த ஆப்பின் மூலம் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அவர்களிடம் தங்களுடைய சோகங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.தனிமையிலோ அல்லது மன அழுத்தத்திலோ இருக்கும் பெண்கள் மனம்விட்டு பேசவும் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இந்த ஆப் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் குஷால்.தங்களுக்கு பிடித்த துணையை தேர்ந்தெடுத்து அவர்களிடம் தங்களது பிரச்சனை குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் முடியுமென்பது இந்த ஆப்-ன் மற்றொரு சிறப்பம்சம்.

ஆனால், இதனை சிலர் தவறாக டேட்டிங் போன்ற விஷயங்களுக்காக பயன்படுத்திவிடக் கூடாது என்பதால், இந்த ஆப்பில் பேசும் ஆண்கள் பல்வேறு தேர்வுகளுக்குப் பின்னரே தேர்ந்தெடுக்கபப்டுகின்றனர்.

தற்போதைக்கு இந்த ஆப் மூலம் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களிடம் மட்டுமே பேச முடியும். கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் ஆண்கள் பகுதி நேர வேலையாக இதனை செய்து வருவதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைப்பதாகவும் கூறுகிறார் குஷால்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்