இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே நாளில் ஹீரோவான அமைச்சர்….!! இலங்கையில் இப்படியும் ஒரு அரசியல்வாதியா…?

இலங்கை நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து கேட்கும் கேள்விக்கு பதிலளித்த தென்னிலங்கை அமைச்சுருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்னர்.10 மணித்தியாலங்களில் நாடாளுமன்றில் அமர்ந்திருந்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் புதிய வரலாற்று ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.நேற்று மாலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மாலை 7 மணி வரை சபையில் இருந்துள்ளார்.அத்துடன் குறித்த காலப்பகுதியில் அவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுப்பான வகையில் பதிலளித்துள்ளார்.

இந்த செயலை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் பாராட்டியுள்ளனர்.வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது அமைச்சர் ஒருவர் நாள் முழுவதும் சபையில் அமர்ந்து கேள்விகளுக்கு பதிலளிப்பதென்பது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும்.

அத்துடன் அனைத்து கேள்விகளுக்கு சரியாக பதில் வழங்குவதென்பதும் அரிய செயற்பாடாகும்.அமைச்சர் காரியவசத்தின் இந்தச் செயலை எதிர்க்கட்சி உறுப்பினர்களே அதிகமாக பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்