இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்களில் குதிப்பார்கள்…! அமைச்சர் அர்ஜுன.

இலங்கை கிரிக்கெட் அணியின் நிலை தொடர்ந்தும் தோல்வி பாதையில் நகர்ந்தால் மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டி – தலதா மாளிகையில் மதவழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறும்போது;

“கடந்த ஒருமாதத்திற்கு முன்னதாக ஒரு சிறந்த கூட்டணியை உருவாக்கியிருந்தோம். ஆனால் மீண்டும் களவு செய்யும் கூட்டத்திற்கே மீண்டும் வாக்களித்து அவர்களை அமர வைத்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியில் சில குளறுபடிகள், குழப்பங்கள் இருக்கலாம். ஆனால், இவர்களால் இதை கொண்டு நடத்த முடியுமென நான் நம்பவில்லை. இவர்கள் கிரிக்கெட் விளையாடிவர்கள். சூதாட்டம் செய்தவர்கள், கொள்ளையில் ஈடுபட்டவர்களே உள்ளனர்.

எனினும், எதிர்காலத்தில் கிரிக்கெட்டை முன்னோக்கி நகர்த்த முடியுமென நம்புகின்றேன். அரசாங்கம் என்ற ரீதியில் இதற்கு சரியான தீர்வு எடுக்க வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் நாசமாக்கி அரசாங்கமாக இந்த அரசாங்கம் பெயர் எடுக்கும். ஆனால் இதற்கு பிரதமர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

மேலும், ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு கிரிக்கெட் சபைக்குள் பாரிய மாற்றத்தை கொண்டுவர மிகப்பெரிய கடமை உள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் இதற்கு மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளார். சொந்த செலவில் சென்று வீரர்களுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார். ஆனால் ஆலோசித்து தீர்வில்லை. மீண்டும் சூதாட்டம் செய்தவர்கள், கொள்ளையில் ஈடுபட்டவர்களே நிர்வாகத்தில் உள்ளதால், இது அணியை முன்னேற்றுவது கடினம்.

இவர்களுக்கு கிரிக்கெட் பற்றி தெரியாது. சூதாட்டகார்கள் பதவிக்கு வந்ததும் இலங்கை அணி தோல்வியை தழுவுகின்றது. இதன் பின்னணில் எதுவும் உள்ளதா என்பதை தீர ஆராய வேண்டும். மக்கள் குறிப்பிட்ட காலத்தில் போராட்டத்தில் குதிப்பார்கள் இலங்கை கிரிக்கெட் அணியை நாசமாக்கியதற்காக. நான் வீரர்கள் மீது குறை சொல்ல விரும்பவில்லை.

இலங்கை கிரிக்கெட் அணி நாசமாகியது நல்லாட்சியில் தான் என்பதை நாம் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் இதற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றே ஆக வேண்டும்.

உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி சாதிக்குமா என்பது குறித்து தற்போது என்னால் கூற முடியாது. காரணம் அப்படி கூறினால் என்னை தேச துரோகி என கூறுவர். ஆனால் விளையாட்டு வீரனாக ,இலங்கையானாக அணி வெற்றிபெறும் என கூறுகிறேன். அடுத்த தேர்தலில் தற்போதுள்ள சூதாட்ட கொள்ளை கூட்டத்தை விரட்டும் அணியுடனேயே நான் இணைவேன்” என கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜூன ரணதுங்க தலைமையில், இலங்கை அணி 1996ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்