பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா!

கச்­ச­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தின் வரு­டாந்­தத் திரு­வி­ழா­வுக்­கான கொடி­யேற்­றம் நேற்­று­மாலை இடம்­பெற்­றது. கொடி­யேற்­றத்­தைத் தொடர்ந்து சிலு­வைப்­பா­தை­யும் இடம்­பெற்­றது.யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து குறி­காட்­டு­வா­னுக்கு அதி­காலை 3.45 மணி­ய­ள­வில் இருந்து பேருந்­து­கள் மூலம் மக்­கள் செல்ல ஆரம்­பித்­த­னர். அங்­கி­ருந்து பட­கு­கள் மூலம் அவர்­கள் கச்­ச­தீ­வுக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். அந்த ஏற்­பா­டு­க­ளைக் கடற்­ப­டை­யி­னர் மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

அதே­வேளை நெடுந்­தீவு, மன்­னார், தலை மன்­னார், காங்­கே­சன்­துறை போன்ற இடங்­க­ளில் இருந்­தும் தமது சொந்­தப் பட­கு­க­ளி­லும் மக்­கள் கச்­ச­தீ­வுக்கு வந்­தி­ருந்­த­னர். சுமார் 5 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் இலங்­கை­யில் இருந்து திரு­வி­ழா­வில் கலந்து கொண்­ட­னர்.இந்­திய பக்­தர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் வீழ்ச்சி

இந்­தி­யா­வில் இருந்து இம்­முறை திரு­வி­ழா­வில் கலந்­து­கொள்ளும் பக்­தர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. 2 ஆயி­ரத்து 229 பேரே இம்­முறை இந்­தி­யா­வில் இருந்து வந்­துள்­ள­னர். கடந்த வரு­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இது மிக­மி­கக் குறைவே.

தற்­போது நில­வும் கடும் வெப்­பத்­து­ட­னான கால­நி­லை­யால் மக்­கள் பெரி­தும் அல்­லல்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. குறி­காட்­டு­வா­னில் நீண்ட நேரம் மக்­கள் பட­கு­க­ளுக்­கா­கக் வெயி­லில் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை­மை­யும் காணப்­பட்­டது.

இரண்டாம் இணைப்பு:

பல்­லா­யி­ரக் கணக்­கான பக்­தர்­கள் இதில் கலந்­து­கொண்­ட­னர்.ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற விசேட திருப்பலிப் பூஜையின் பின்னர் திருச்சொரூபப் பவனியுடன் திருவிழா நிறைவுபெற்றது.

குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நெடுந்தீவு பங்குப்பணிமனை மேற்கொண்டிருந்ததுடன் தமிழகத்தைச் சேர்ந்த பங்குத்தந்தைகளும் இத்திருவிழாவில் பங்கெடுத்திருந்தனர். வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (சனிக்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று மாலை 5 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆரம்பமாகிய திருவிழா இன்று விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு நிறைவு பெறவுள்ளது.

இத்திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டதாக  தெரிவிக்கப்படுகின்றது .மேலும் ,இலங்கை – இந்திய பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அந்தவகையில் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கு அவர்களின் படகுகளை தரித்து வைப்பதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் பங்கேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக மக்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ளவர்களும் திருவிழாவில் கலந்து கொள்வது மரபாக கடைப்பிடிக்கப்படுவரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருப்பலி மற்றும் சொரூப திருப்பவனியுடன் விழா இனிதே இன்று நிறைவுபெறவுள்ளது.கச்சதீவு திருவிழாவை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் படகுச் சேவையின்போது கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என்றும் இலங்கைக்கடற்படை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்