ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம்…!! கொக்கரிக்கும் பொதுஜன பெரமுன…!!வாய்ப்பை இழந்தாரா மைத்திரி..?

நாட்டுக்கு தேவை நாட்டை வெற்றி பெற செய்யும் கூட்டணியே தவிர தனி நபரை வெற்றி பெற செய்யும் கூட்டணி அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார் என்ற போதிலும் அந்த கட்சியுடன் இணைந்து கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.மினுவங்கொட உடுகம்பள பிரதேசத்தில் கட்சியின் அங்கத்தினருடனான சந்திப்பில் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து மீண்டும் மைத்திரியை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வரும் தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிலருக்கு உள்ளது.எனினும், நாட்டை நேசிக்கும் மக்கள் மகிந்த ராஜபக்சவே நாட்டின் தலைவராக வர வேண்டும் என்று விரும்புகின்றனர். மக்கள் இரவு விழுந்த குழியில் பகலில் விழ தயாரில்லை. தயாசிறிகள் வெட்டும் குழியில் நாங்கள் விழ தயாரில்லை.

கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் நாங்கள் தெளிவான மனநிலையில் கவனமாக கலந்துக்கொள்கிறோம். இம்முறை எங்களை ஏமாற்ற முடியாது.எங்களது ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் தெரிவு செய்து விட்டோம். நாடே எதிர்பார்க்கும் வேட்பாளரை மகிந்த ராஜபக்ச உரிய நேரத்தில் அறிவிப்பார். யார் என்ன கூறினாலும் நாட்டின் அடுத்த தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக தெரிவு செய்யப்படுவார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டை அழித்து கொள்ளையிடுகிறது. இதனை தவிர வேறு எதனையும் செய்யவில்லை. நாட்டு மக்கள் தமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்பது நிச்சயம் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்