இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…16.03.2019

16-03-2019 சனிக்கிழமை விளம்பி வருடம் பங்குனி மாதம் 2-ம் நாள்.

வளர்பிறை தசமி திதி மாலை 6.54 மணி வரை பிறகு ஏகாதசி. புனர்பூச நட்சத்திரம் இரவு 9.54 மணி வரை பிறகு பூசம். யோகம்: சித்தயோகம்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30
குளிகை: 6:00 – 7:30.
சூலம்: கிழக்கு.

பொது: சென்னை மல்லீஸ்வரர் பவனி, மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம், இரவு பூப்பல்லக்கில் பவனி.

பரிகாரம்: தயிர்.

மேஷம்:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள்உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்

மாலை 4.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும். மாலை பொழுதிலிருந்து நிம்மதி உண்டாகும் நாள்.

கடகம்:

திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை 4.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்:

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். சிறப்பான நாள்.

கன்னி:

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீகள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்:

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

விருச்சிகம்:

மாலை 4.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்களுக்காக பரிந்துப்பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். மாலையில் இருந்து நேர்மறை எண்ணங்கள் பிறக்கும் நாள்.

தனுசு:

பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆனால் மாலை 4.15 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்:

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்புகிடைக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

கும்பம்:

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக்கிட்டும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்:

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அரசுஅதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்