சற்று முன் நடந்த பயங்கரம்….பள்ளிவாசலில் புகுந்து பயங்கரத் துப்பாக்கிச் சூடு…!! பலர் பலி… !! பலர் படுகாயம்…!கிரிக்கெட் வீரர்களின் கதி என்ன…?

நியுசிலாந்தில் உள்ல பள்ளிவாசல் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்ட சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த திடீர் அனர்த்தத்தின்போது, பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பங்களாதேஷ் கிரிகெட் வீரர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.நியூசிலாந்தின் Christchurch பகுதியிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள்மீதே இந்த தாக்குதல் மேற்கொள்லப்பட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசலினுள் கறுப்பு நிற ஆடையுடன் உள் நுழைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்தோர்மீது கண்மூடித்தனமாக சுடத்தொடங்கியுள்ளார்.இதனையடுத்து அங்கு தொழுகையிலீடுபட்ட அனைவரும் அல்லோலகல்லோலப்பட்டு அங்கிருந்து சிதறியோடியுள்ளனர். சூடுபட்டவர்கள் பள்ளிவாசலினுள் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.எவ்வாறாயினும் தாக்குதலை மேற்கொண்ட குறித்த துபாக்கிதாரி அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காயம்பட்டோரை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தாக்குதலாளி தப்பித்துள்ளதால் அந்த பகுதியிலுள்ள மக்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிரிகெட் அணியின் வீரர்களும் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்லதாக நியூசிலாந்து பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

பங்களாதேஷ் அணியின் வீரர் ஒருவர் குறிப்பிடுகையில், ”அங்கிருந்த எமது முழு அணியினரும் துப்பாக்கிதாரியிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டனர்.” என்றார்.

மேலும் பங்களாதேஷ் கிரிகெட் சபையின் தலைவர் ஜலால் யூனஸ் இதுகுறித்து குறிபிடுகையில், “எங்களது அணியைச் சேர்ந்த பல வீரர்கள் ஒரு பேருந்தில் பள்ளிவாசல் நோக்கிச் சென்றனர். அங்கு துப்பாக்கிப் பிரயோகம் சரமாரியாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

ஆனாலும், அவர்கள் பாதுகாப்பாக உள்ளே சென்றுவிட்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பாகவே உள்லனர். ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்தமையால் மன ரீதியாக பாதிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் அனைவரும் ஹொட்டலில் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை நாங்கள் கேட்டு உறுதிப்படுத்தியுள்ளோம்” என்றார்.

Christchurch பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்திருகலாம் என அஞ்சப்படுகிறது.தற்பொழுது குறித்த பகுதியில் தாக்குதலாளியைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்