ஆறு வயதுச் சிறுவனுக்கு பலாத்காரமாக மதுபானத்தை பருக்கிய நபர்…!!

தனது 6 வயது சிறுவனுக்கு பலாத்காரமான முறையில் மது அருந்தச் செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை – மொதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.அயல்வீட்டில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த வீட்டிற்கு விளையாட சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பிய போது அவரின் வாயில் இருந்து மது நாற்றம் வீசியது.இந்த நிலையில், அது தொடர்பில் சிறுவனிடம் தாயார் கேட்டுள்ளார் .

இதன்போது,  திருமண வைபவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த நபரொருவர் தனக்கு ஒருவித பானத்தை அருந்தச் செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார்.சிறுவனை அம்பலாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி மருத்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்