விமானத்தில் கண்ணீா்விட்டு கதறிய தாய்….! விமானத்தை தரையிறக்கி சவுதி விமானசேவை செய்த உணா்வுபூா்வமான உதவி….!!

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு வந்து விட்டதாக கூறி மீண்டும் விமானத்தை திருப்பும்படி கதறியுள்ளார்.சவுதி கிங் அப்துல் அசிஸ் விமான நிலையத்திலிருந்து – கோலாலம்பூருக்கு நோக்கி சவுதி அரேபியன் (Saudi arabian SV832), ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.

அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீரென்று அதிர்ச்சியில் அங்கிருந்த விமான ஊழியரிடம் பதற்றத்துடன் ,”நான் என் குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு வந்து விட்டேன்அழுதபடி மீண்டும் விமானத்தை விமான நிலையத்திற்கு திருப்புங்கள் என்று கூக்குரலிட்டுள்ளார். இத்தகவல் விமானிக்கு தெரிவிக்கப்பட்டதால் விமானி கட்டுபாட்டு அறைக்கு( ATC ) தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார்.

பின்னர் மற்ற பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் வேறு விமானம் தரை இறங்கும் நேரம் என அனைத்தையும் சிறிது நேரம் மாற்றி அமைத்து ஒருமாதிரி விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுத்து உள்ளனர். முடிவில் தாயும் சேயும் ஒன்று சேர்ந்தனர்.விமானி கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரவலாகி இருக்கிறது. பொருட்களை மறந்து வைத்து விட்டு வருவார்கள். ஆனால், பெற்ற குழந்தையை யாராவது மறந்து விட்டு வருவார்களா?

என பலரும் முகம் சுளிக்கத் தொடங்கி விட்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்