அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை…!! அமெரிக்காவில் நடந்த அதிசயம்..!

கர்ப்பமாக முடியாது என்று வைத்தியர்கள் கூறிய திருநங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த வைலே சிம்ப்சன் என்பவளுக்கு ஆணாக மாறவேண்டும் என்பது ஆசை. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான் அண்டோனியோ பகுதியைச் சேர்ந்தவர் வைலே சிம்ப்சன். தற்போது 28 வயதாகும் இவர் தனது 21 வயதில் பெண்ணாக இருந்து ஆணாக மாறினார்.இதையடுத்து, அவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் ஸ்டீபன் கீத் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.சிம்ப்சனுக்கு மாதவிடாய் சுழற்சி இல்லாததால், குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று வைத்தியர்கள் கூறிய நிலையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் அவர் கர்ப்பமானார். மீசை, தாடி தோற்றத்துடன் வயிற்றில் குழந்தையை சுமந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.தற்போது, 6 மாத குழந்தையுடன் சிம்ப்சன் – கீத் ஜோடி மகிழ்ச்சியோடு வசித்து வருகின்றனர். அறுவை சிகிச்சை மூலமாக சிம்சனுக்கு பிரசவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்