ஆசியாவின் அடுத்த அதிசயத்தை அதிரடியாக அறிமுகம் செய்யும் இலங்கை…!! மிக விரைவில் ஆரம்பமாகும் பணிகள்…!!

தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் ஒன்று இலங்கையின் கொழும்பில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள இந்தப் பாலம் ஐந்து மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளதாக அரசாங்க ஊடகம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் 175 மீற்றர் உயரத்தைக் கொண்டதும், 10 மீற்றர் அகலத்தைக் கொண்டதுமாக நிர்மாணிக்கப்பட உள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில் ஏற்கனவே தென்னாசியாவின் அதிகூடிய உயரத்தினைக் கொண்டதான கட்டடமாக தாமரைக் கோபுரம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்