மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த ஐரோப்பிய நாடுகள்….!!

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஐந்து நாடுகள் முதலிடத்தினை பிடித்துள்ளன.டென்மார்க், பின்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளே இந்த பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளன.சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு அண்மையில் நடத்தப்பட்டது.

அதில் டென்மார்க், பின்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் சிறப்பாக இருப்பது தெரியவந்தது.அதன்மூலம் உலகில் மிக மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் டென்மார்க் உள்ளிட்ட 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகுள் 10 இற்கு தலா 7.5 புள்ளிகளை பெற்றுள்ளன.

அத்துடன், இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவுக்கு 6.9 புள்ளிகளும், இங்கிலாந்துக்கு 6.7 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்