உலகை உலுக்கிய இன்னுமொரு கோர விமான விபத்து… !! வான் வெளியில் வெடித்துச் சிதறிய விமானம்…!! 157 பயணிகள் பரிதாபமாகப் பலி….!

எத்தியோப்பிய விமான விபத்தில் 18 கனேடிய பிரஜைகள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் 18 கனேடியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர்.18 கனேடியர்களில் Scarborough பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று காலை எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.அதில் தனது மகள் உயிரிழந்து விட்டதாக  பகுதியை சேர்ந்த பெண்ணின் தந்தை உறுதி செய்துள்ளார்.

தனது மகள் உயிரிழந்த செய்தி கேட்டு முழு குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாக கனேடிய ஊடம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த விபத்தில் 35 நாடுகளை சேர்ந்த பயணிகள் பயணித்திருந்தமை உறுதியாகியுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்