திருமணம் நடந்ததில் இருந்து வாயே திறக்காத கணவன்…..!! 62 வருடங்களின் பின் கண்டுபிடித்த மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

திருமணம் நடந்ததிலிருந்தே காது கேளாதவர் போல நடித்த கணவரின் செயல் 62 வருடங்களுக்கு பிறகு அம்பலமானதால், விவாகரத்து செய்ய அவருடைய மனைவி முடிவெடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த பாரி டவ்சன் (84) என்பவர், தனக்கு வரப்போகிற மனைவி டோரத்தி (80) அதிகம் வாய் பேசும் சுபாவம் கொண்டவர் என்பதால், அதனை தவிர்க்க தனக்கு காது கேட்காது எனக்கூறியுள்ளார்.

அதனை நம்பி ஏற்றுக்கொண்ட டோரத்தி, கணவனுக்காக 2 ஆண்டுகள் சைகை மொழியை கற்றுக்கொண்டுள்ளார். அதனை வைத்தே கணவனிடம் பேசி வந்துள்ளார்.ஆனால், நாளடைவில் தனக்கு கண் சரியாக தெரியவில்லை எனக்கூறி பாரி டவ்சன் சமாளித்துள்ளார். வயதான காரணத்தால் கண் தெரியாமல் போயிருக்கலாம் என அவருடைய குடும்பத்தாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த தம்பதியினருக்கு 6 வாரிகள், 13 பேரன், பேத்திகள் உள்ளனர்.இந்த நிலையில் ஒரு அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரி, அங்கு இசைக்கேற்றவாறு பாடல் பாடியுள்ளார். அந்த வீடியோவினை அறக்கட்டளை நிர்வாகிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த டோரத்தி, பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

62 வருடங்களாக கணவர் தன்னை ஏமாற்றியிருப்பதை நினைத்து விவாகரத்து கோரியுள்ளார். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது பாரி சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பாரி இயல்பிலே மிகவும் அமைதியான குணம் கொண்டவர். ஆனால், அவருடைய மனைவி எரிச்சலூட்டும் வகையில் பேசிக்கொண்டிருப்பார். இந்த விவகாரம் முன்பே தெரிந்திருந்தால், 60 வருடங்களுக்கு முன்பே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்திருப்பார்கள்.

ஆனால், என்னுடைய கட்சிக்காரர் அமைதியாக இருந்ததால் 62 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கின்றனர். தன்னுடைய குடும்பத்திற்காக, அவர் இந்த தியாகத்தை செய்திருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்