கல்லறையில் இருந்து கேட்ட அலறல் சத்தம்… !! உடைத்துப் பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

உயிரிழந்ததாக நினைத்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீரென உயிருடன் எழுந்து வந்துள்ள சம்பவம், பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டில் ஒருவர் இறந்து விட்டதாக கூறி அவருடைய குடும்பத்தினர் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.அதிகாலையில் திடீரென கல்லறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு வேலை செய்த நபர் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், கல்லறையை உடைத்த போது, உள்ளே அடக்கம் செய்யப்பட்டிருந்த நபர் உயிருடன் எழுந்து வெளியில் வந்துள்ளார்.

ஒரு இரவு முழுவதும் உள்ளே இருந்ததால், அவர் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டுள்ளார். அந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.தற்போது இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதனைப் பார்த்த இணையதளவாசி ஒருவர், நல்ல வேளையாக பிரேத பரிசோதனை செய்யவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்