வடக்கின் மாபெரும் சமரின் முதலாம் நாள் நிறைவு…!! யாழ். சென் ஜோன்ஸ் அணி முன்னிலையில்…!

வடக்கின் மாபெரும் சமர் கிரிக்கெட் போட்டின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையிழந்து 59 ஓட்டங்களை எடுத்துள்ளது.யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 113ஆவது வடக்கின் மாபெரும் சமர் துடுப்பாட்டத்தில்  நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியை துடுப்பெடுத்தாடப் அழைத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அடி முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது.டினோசன் 98 ஓட்டங்களைப் பெற்றார். அபினாஸ் 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இயலரசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்குக் களமிறங்கிற மத்திய கல்லூரி அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இயலரசன் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்