இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன் (05.03.2019)

05-03-2019 செவ்வாய்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 21ம் நாள்.

தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 7.34 மணி வரை பிறகு அமாவாசை. அவிட்ட நட்சத்திரம் பிற்பகல் 3.44 மணி வரை பிறகு சதயம். யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.44 மணி வரை பிறகு மரணயோகம்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.
குளிகை: 12:00 – 3:30.
சூலம்: வடக்கு.மேஷம்:

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

ரிஷபம்:

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந் ததை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

மிதுனம்:

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மனம் விட்டு பேசி சில முடிவுகள் எடுப்பீர்கள்.எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.

கடகம்:

சந்திராஷ்டமம் தொடங்குவதால் வீண் சந்தேகமும், மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டி வரும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்:

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள்-. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.

துலாம்:

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்:

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.

தனுசு:

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

மகரம்:

இன்றைய நாள் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்திருந்த பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்:

ராசிக்குள் சந்திரன் செல்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம்.வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்த ரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்பு கூடும் நாள்.

மீனம்:

மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப்புரிந்துக் கொள்ளுங்கள். சலிப்பு, சோர்வு வந்து விலகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்