திருகோணேஸ்வர பெருமானின் 55 அடி உயர கம்பீரமான திருவுருவச் சிலை வைபவ ரீதியாக இன்று அங்குரார்ப்பணம்..!

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் புனருத்தாபனம் செய்யப்பட்ட திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. துரைரட்ணசிங்கம், சுசந்த புஞ்சிநிலமே, தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியோர் திருவுருவ சிலையை திறந்து வைத்துள்ளனர்.குறித்த நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர், தொண்டர் சபையினர், திருமலை மாவட்ட கடற்படை தளபதி மற்றும் சைவ அடியார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 55அடி உயரமான குறித்த சிலையினை இந்தியாவைச் சேர்ந்த சிப்பிகள் வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்