மாகந்துர மதுஷ் உள்ளிட்டவர்களுக்கு துபாய் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!!

துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா, அவரது மகன் நதீமல் பெரேரா மற்றும் ஏனையவர்களை மேலும் ஒரு மாத காலம் விளக்கமறியலில் வைக்க டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துபாய் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமல் பெரேரா மற்றும் நதீமல் பெரேரா சார்பாக ஆஜரான சட்டத்தரணி சப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார்.இதேவேளை, கடந்த 4ஆம் திகதி துபாயில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற இரவு விருந்தொன்றின் போது மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுடன், கலைஞர்களான அமல் பெரேரா, அவரது மகன் நதிமால் பெரேரா உள்ளிட்ட முப்பதுக்கும் அதிகமானோர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டார்கள்.ஒரு மாத காலமாக இவர்கள் மீதான விசாரணை துபாய் பொலிஸார் மற்றும் அந்நாட்டு நீதிமன்றத்தை தொடர்பாடல் செய்யும் சட்ட வல்லுனர் அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டது.

இக்காலகட்டத்தில் இவர்கள் தொடர்பாக இரத்த பரிசோதனை நடத்தப்பட்டு போதைப்பொருள் பாவித்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டார்கள்.அதில், அமல் பெரேராவின் மகன், மதுஷின் மனைவி மற்றும் சிலரின் இரத்த மாதிரிகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்