ரயில் நிலைய பாதுகாவலராகப் பொறுப்பேற்ற பூனை..!! ( வைரலாகும் காணொளி…)

இஸ்ரேலிய ரயில் நிலையம் ஒன்றுக்குப் புதிய பாதுகாவலர் பொறுப்பேற்ற விடயம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.ஷவர்மா என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு பூனைதான் அந்தப் பாதுகாவலர்.
ரயில் நிலையம் டெல் அவிவ் நகருக்கு அருகில் உள்ளது. அங்கு வந்ததிலிருந்து பூனை ஒவ்வொரு நாளும் நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்கிறது.பயணச்சீட்டை வருடும் இயந்திரத்தின் மீது ஏறி உட்கார்ந்து பாதுகாவலரைப் போலவே ஷவர்மா, பயணிகளின் நடவடிக்கையைக் கண்காணித்து வருகிறது.

சில சமயங்களில் இயந்திரத்தின் மீது சோம்பலாகப்படுத்து உறங்குகிறது. மற்ற நேரங்களில் கம்பீரமாக நிற்கிறது.பூனையைப் பெரும்பாலான பயணிகள் பொருட்படுத்தாமல் அட்டையை வருடிவிட்டு நுழைவாயிலுக்குள் சென்றுவிடுவர். சிலர், பூனையைத் தடவிக் கொடுப்பர்.

பூனையின் இந்த விநோதமான போக்கைப் பயணி ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.உலகம் முழுவதும் பரவி வரும் காணொளி, இதுவரை 6 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்