கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற மஹிந்த..!!

காலியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் உறவினர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ளார்.ரத்கம, பூஸ்ஸ பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் வீடுகளுக்கு நேற்று மஹிந்த நேரடி விஜயம் மேற்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருமாறு ஜனாதிபதியிடம், கேட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கி, நியாயத்தை பெற்றுத் தருமாறு, வர்த்தகர்களின் உறவினர்கள் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்