இலங்கை மக்களுக்கு அடிக்கப் போகும் மகாயோகம்…!! மிக விரைவில் உருவாகும் மிகப் பெரிய ஊக்குவிப்பு வலயம்…!!

5 வருட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அடுத்த மாதம் இயங்கத் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த முதலீட்டு வலயம் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளதாகவும், அடுத்த மாதம் நான்காம் திகதி தொடக்கம் இது இயங்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டின்போதே பிரதியமைச்சர் பிங்கிரிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் குறித்த மேற்படி தகவலை அரசாங்கம் சார்பாக அறிவித்தார்.

இதேவேளை இலங்கையின் பாரிய முதலீட்டு வலையமாக கருதப்பட்டுவந்த கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தை விடவும், இரண்டு மடங்கு பெரியதாக அமைந்திருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்