இந்தியாவிற்கு எதிரான முதலாவது ரி-20: இறுதிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா…!!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ரி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளினால் இறுதிப்பந்தில் திரில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட ரி 20 தொடரின் முதல் போட்டி நேற்று இரவு 7.00 மணியளவில் விசாகப்பட்டனத்தில் நடைபெற்றது.இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய, இந்தியா முதலாவதாக துடுப்பெடுத்தாடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து 127 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 5 ஓட்டத்துக்குள் அடுத்தடுத்து சரிந்தது.எனினும், அடுத்துவந்த டார்சி ஷார்ட் மற்றும் மெக்ஸ்வெல் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர்.தொடர்ந்தும் இவர்கள் இருவரும் இந்திய அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாடி ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 51 ஓட்டத்தையும் 10 ஓவர்களின் முடிவில் 67 ஓட்டத்தையும் பெற்றது. எனினும், 13.3 ஆவது மெக்ஸ்வெல் 56 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, 15.2 ஆவது ஓவரில் ஷார்ட் 37 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஹேன்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர் ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்கி ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போதும் ஆஷ்டன் டர்னர் டக்கவுட் முறையில் 16.2 ஆவது ஓவரில் குருனல் பாண்டியாவின் பந்து வீச்சில் போல்ட் முறையிலும், ஹேன்ட்ஸ்கோம்ப் 13 ஓட்டத்துடன் 18.5 ஆவது ஓவரில் பும்ராவின் பந்து வீச்சிலும், ஆட்டமிழந்து வெளியேற வெற்றிவாய்ப்பு இந்தியாவின் பக்கம் திரும்பியது.

அது மாத்திரம் அல்லாமல் ஹேன்ட்ஸ்கோம்ப்பின் வெளியேற்றத்தையடுத்து கவுல்டர்-நிலேவும் 4 ஓட்டத்துடன் பும்ராவின் அடுத்த பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற்றினார்.இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்றதுடன், இறுதி ஓவரில் வெற்றிக்கு 14 ஓட்டம் தேவை என்ற நிலை உருவானது.

ஆடுகளத்தில் பேட் கம்மின்ஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் துடுப்பெடுத்தாடி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பினை பறித்தனர்.அதன்படி ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை தொட்டது.இதனால், இரண்டு போட்டிகள் கொண்ட ரி 20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்