தென்னாபிரிக்க அணிக்கு வெள்ளையடிப்பு…!! அந்திய மண்ணில் சாதனை படைத்த இலங்கை அணி..!!

தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை கைப்பற்றியதுடன் ஆசிய அணி ஒன்று தென்னாபிரிக்க மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றை வெற்றிகொண்ட பெருமையையும் தனதாக்கியுள்ளது.போட் எலிசபெத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 222 ஓட்டங்களை பெற்றது.இவ் அணியின் சார்பாக டி கொக் மற்றும் மார்க்ரம் முறையே 86,60 ஓட்டங்களை கூடுதலாகப் பெற்றனர்.

பந்து வீச்சில் பெர்னாண்டோஇராஜித இருவரும் தலா 03 விக்கெட்டுக்களையும் டி சில்வா 02இகருணாரத்ன ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.தொடர்ந்து தனது முதல் இனிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணியும் ரபாடாமற்றும் ஒலிவரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 154 ஓட்டங்களுடன் சுருண்டது.டிக்வெல்ல மட்டுமே கூடுதலாக 42 ஓட்டங்களைப் பெற்றார்.பந்து வீச்சில் ரபாடா 04இஒலிவர் 03 விக்கெட்டை கைப்பற்றினர்.

தொடர்ந்து 68 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இனிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி லக்மல் மற்றும் டி சில்வாவின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 128 ஓட்டங்களுடன் சுருண்டது.அவ்வணி சார்பில் டு பிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 50 அம்லா 32 ஓட்டங்களை கூடுதலாகப்பெற்றனர்.பந்து வீச்சில் லக்மல் 04,டி சில்வா 03ராஜித 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

197 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது.இலங்கை அணி சார்பாக பெர்னாண்டோ மற்றும் மென்டிஸ் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 75,84 ஓட்டங்களைப்பெற்றனர்.இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மென்டிஸ்,தொடர் நாயகனாக குசல் பெரேரா தெரிவாகினர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்