வடமராட்சியில் 90 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் பாரிய ஆலயம்…!! அடிக்கல்லும் நாட்டி வைப்பு..!

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.ஆலயத்தின் மூலாலய அடிக்கல்லை ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் நாட்டி வைத்தார்.இவ்வாலயத்தின் திருப்பணி வேலைகளினை தமிழ்நாடு வை.கார்த்திகேய ஸ்தபதி பொறுப்பேற்றுள்ளார்.

அருணகிரிநாதர் பதிகம் பாடப்பட்ட தலமாக விளங்கும் இவ்வாலயம் மிகவும் பழமைவாய்ந்த ஓர் ஆலயமாக காணப்பட்டு வருகின்றது.அதுமட்டுமல்லாது பலநூறு வருடங்கள் பழமைவாய்ந்த பிரமாண்டமான கட்டுத்தேரும் காணப்படுவதுடன், மிகபிரமாண்டமான ஐம்பொன்னினால் அமைக்கப்பட்ட ஆறுமுக சுவாமியும் மேலும் இவ்வாலயத்தின் சிறப்புக்களாகும். அதுமட்டுமல்லாது கற்பூரம் விளைந்த தடாகமும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் வன்னிமரமும், குழந்தை வரமளிக்கும் அதிசய மாமரமும் இவ்வாலயத்தில் மேலும் சிறப்புக்களை எடுத்துக்காட்டுகின்றன. பல வரலாற்றுச் சிறப்புக்களை கொண்ட இவ்வாலயத்தின் இன்னும் பல வரலாறுகள் உள்ளன. அவற்றினை மீண்டுமொரு பதிவில் காணலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்