இந்திய அரசின் நிதி உதவியில் யாழில் அமையப் போகும் தகவல் தொழில்நுட்ப வணிக மையம்!

இலங்கை – இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ இலங்கைஇ இந்திய அரசுகள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளன.

இதற்கென தனியார்துறையின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக்கொள்ளவுள்ளது.

இந்திய அரசும் இலங்கை அரசும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் நேற்று (21) கையொப்பமிட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய தொடர்புடைய துறைகளுக்கான வர்த்தக மையம் யாழ். நகரில் அமையும்.அக்கறையுடைய மற்றும் ஊக்கமுள்ளவர்களுக்காக செயற்படும் இந்த வர்த்தக மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு இந்திய அரசாங்கத்தால் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இளைஞர்களின் தொழில் சிந்தனைகளை அபிவிருத்தி செய்துஇ வர்த்தகத்தை புத்திசாதூர்யத்துடன் நடைமுறைப்படுத்த தற்போதுள்ள தேவைகளுக்கு அப்பால் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது இலங்கைக்கு தேவையாகவுள்ளது. எனவே, நாட்டிலுள்ள தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், தொழில்முனைவோர் மற்றும் தொடக்கத் திறன்களை மேம்படுத்துவதற்கும் அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது.

தொழில்முனைவோர், வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், வர்த்தக மையத்தை நிறுவுவதற்கான அவசியமுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை தற்போதைய நவீன வசதிகள் மூலம் வரும் வசதிகள் செய்யப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளஉத்தேச வர்த்தக மையம், ஆரம்பத்தில் ஊக்கம் மற்றும் அக்கறை உடையவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்.இது தனி நபர்கள், குழுக்கள், ஆர்வமுள்ள நிறுவனங்களை மேம்படுத்துதல், விரிவுபடுத்துதல் சர்வதேச சந்தை தேவைகளை பூர்த்திசெய்யவும் உதவும்.வடக்கு பிராந்தியத்தில் தங்கள் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், செயல்படுத்துவதற்குமான வசதி காப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.தொடக்க நிலை வியாபாரம் (start-ups) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) மற்றும் வணிகசெயல்முறை மேலாண்மை (BPM) ஆகியவற்றிற்கு மட்டுமன்றி, பயிர்ச்செய்கை, உணவு தொழில் நுட்பம், உயிரி தொழில்நுட்பம், சுற்றுலா போன்ற துறைகள் உள்ளடக்கும்.

இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் கல்வி பயின்ற இளைஞர்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இது வடபிராந்தியத்தில்உள்ள இளைஞர்களை உலகளாவிய ரீதியில் தொடர்புபடுத்தவும் மற்றும் இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும்.இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் செல்வதைக் குறைப்பதற்கான சாத்தியம் இதனால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முயற்சியானது வடபிராந்தியத்தை ஒரு வளர்ந்துவரும் பிராந்தியமாகவும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வளமானதாகவும் மாற்றும்.

இந்த திட்டம் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்