இலங்கையில் இடம்பெறவிருந்த பேராபத்து…! அசண்டையீனமாக செயற்பட்ட சாரதி…. தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்….!!

பண்டாரவளையில் அதிகளவான பயணிகளுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த முயற்சித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.பதுளை – கொழும்பு வீதியில் பயணித்த பேருந்தில் மதுபானம் அருந்திவிட்டு சாரதியாக செயற்பட்டவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மதுபானம் அருந்திவிட்டு அதிக வேகமாக பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி பண்டாரவளை நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சாரதி செலுத்திச் சென்ற பேருந்தில் சுமார் 50 பயணிகளுக்கு மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதி, உதவியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மதுபோதையில் அதிக வேகத்தில் பேருந்தை செலுத்தியமையால், ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தெய்வாதீனமாக அனைத்து பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்