யாழில் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க…! பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு…!

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தினை மையமாகக் கொண்டு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர் இதன்போது பார்வையிட்டுள்ளார்.அத்துடன் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக விழிப்பூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.யாழ்பாண நகர அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயத்திற்கு அருகில்இ 1000 மரங்கள் நாட்டும் நிலையான நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளதோடு மரக்கன்றுகளையும் நாட்டி வைத்துள்ளார்.

அத்துடன் யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக நிர்வாக தொகுதி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.விழா மண்டபம் மற்றும் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர பயண பேருந்து கண்காணிப்பு சேவை நிலையத்தினை பார்வையிட்டுள்ளார்.

தொடர்ந்து யாழ். பொன்னாலை, பெதுருதுடுவை பாதையின் முன் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.தற்போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜனபியச நடமாடும் மக்கள் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்