பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்….திலங்க சுமதிபால அணிக்கு வெற்றி…!! புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு…!!

2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் இன்று(21) இடம்பெற்றது.இந்தத் தேர்தலில் ஷம்மி சில்வா, 83 வாக்குகளைப் பெற்றுள்ளார்.ஜயந்த தர்மதாஸ 56 வாக்குகளையும் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி சம்மி சில்வா 27 மேலதிக வாக்குகளால் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று(வியாழக்கிழமை) 10.30 மணிக்கு ஆரம்பமானது.விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேர்தலில் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர்கள் பதவிக்காக போட்டியிட்ட ரவீன் விக்கிரமரத்ன 82 வாக்குகளையும், மதிவாணன் 80 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.இந்த பதவிக்காக போட்டியிட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்க 72 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

மேலும், செயலாளர் பதவிக்காக போட்டியிட்ட மொஹான் டி சில்வா 96 வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளதுடன், அவரை எதிர்த்து அந்த பதவிக்காக போட்டியிட்ட நிஸாந்த ரணதுங்க 45 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

2019 முதல் 2021 வரையான இரண்டு வருட காலப்பகுதிக்காக தலைவர், உப தலைவர் இரண்டு பேர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் உப பொருளாளர் ஆகிய 7 பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்காக இந்த தேர்தல் இடம்பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்