உயிர்த் தியாகம் செய்த இராணுவ மேஜரின் உடலை முத்தமிட்டு சல்யூட் அடித்த மனைவி…!!

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த ராணுவ அதிகாரியின் உடலுக்கு அவரது மனைவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர் தவுண்டியால் வீர மரணம் அடைந்தார் அவரது உடல் நேற்றைய டேராடூன் கொண்டு வரப்பட்டது.

பொதுமக்களும், ராணுவத்தினரும் திரண்டு மேஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் அப்போது அவரது மனைவி நிகிதா கவுல், தனது கணவரின் உடலை முத்தமிட்டதுடன், தங்களை நேசிப்பதாக முகத்துக்கு அருகே சென்று கூறினார். பின்னர் கணவரின் உடலுக்கு சல்யூட் அடித்தார். இந்த காட்சி காண்போரை உருக்கியது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்