திருவாசகத்தின் பெருமையை அனைவரும் அறிய ஈழத்தில் உதயமான திருவாசக அரண்மனை…!!

எமது இந்துமத வரலாறுகளை, உபதேசங்களை அடுத்த சந்ததிகள் அறிந்துகொள்ள சிலவற்றை குறுகிய நோக்கத்தில் தீண்டாமை, சாதியம் போன்ற காரணங்கள் சாதரண மக்களை அடைய விடாமல் தடுத்ததால், எமது மதத்திலுள்ள ஆகமங்கள், வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் சில கருத்துகளையும் அதன் ஆய்வுகளை அப்படியே மாற்றுமதத்தவர் தங்களது மத வாசங்களாக போதனைகளாக வெளியிடும் போது, எம்மவர் புதிய விடயத்தை அறிந்துகொள்ளுவது போன்று வாசிக்கின்றார்.ஆனால், இக்கருத்துகள் பெரும்பாலும் ஏதாவது உபநிடத, தேவாரம் சார்ந்த கருத்துகளாகயிருக்கும். இதற்கெல்லாம் காரணம் எமது மதத்திலுள்ள குறுகிய சிந்தனையாகும். கல்வியறிவு, மதக்கல்வி எனது பரம்பரையோடு மாத்திரம் இருக்க வேணும் எனும் செயற்பாட்டால், இந்துமத நூல்களின் சிறப்புகள் சாதாரண மக்களை அடையவில்லை.ஆனால், இவற்றையெல்லாம் கவனித்துதான் சாதாரண மக்களுக்கு வெளிப்படுத்தும் ஈழத்திலுள்ள திருவாசகம் அரண்மனை தலைநிமிர்ந்து வரவேற்கின்றது.திருமூலரால் ‘சிவ பூமி’ என்று சிறப்பிக்கப்பட்ட ஈழ திருநாட்டில் திருவாசகத்திற்கு தனியொரு அரண்மனையா?? என உலக தமிழரை வியப்புற வைத்த ஈழத்தின் யாழ்ப்பாணம் நாவற்குழி திருவாச அரண்மனை திகழ்கின்றது.திருவாசகத்திற்கு உருகார் வேறொரு வாசகத்திற்கும் உருகார் எனும் திருவாசக சிறப்பை ஈழத்தில் நாவற்குழி அரண்மணையிலுள்ள கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள 108 சிவலிங்கம் அத்தோடு கருங்கல்லில் பதிகக்கப்பட்ட வாசகங்களே, தற்போதைய சமுகத்திற்கும் எதிர்கால சந்தியினருக்கும் அடையாளப்படுத்துகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்