இன்றிரவு இலங்கை வானில் ஏற்படப் போகும் மாற்றம்…..! காணத் தவறாதீர்கள்…!!

பௌர்ணமி தினமான இன்று இரவு வழமையை விட மிகப்பெரிய அளவில் சந்திரன் தோன்றவுள்ளது.சூப்பர் மூன் என அழைக்கப்படும் இந்த சந்திரனை இன்று இரவு 9.23க்கு இலங்கை மக்கள் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்திரன் பூமியை அண்மித்து பயணிப்பதால் இவ்வாறு வழமையை விட பிரகாசமாக தோன்றவுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த சூப்பர் மூன் வழமையை விட 14 சதவீதம் பிரகாசமாகவும் 6 சதவீதத்தில் பெரிதாகவும் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்