கந்தவனம் வேலவனுக்கு 90 கோடி ரூபா செலவில் கருங்கற்களால் உருவாகும் ஆலயம்…!!

யாழ்ப்பாணம் பொலிகண்டியில் கந்தவனம் வேலவனுக்கு சுமார் 90 கோடி ரூபா செலவில் ஆலயமென்று நிர்மாணிக்கப்படவுள்ளது. ஆலய நிர்மாணத்திற்கான அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டுள்ளது. ஆலய திருப்பணி வேலைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.ஏற்கனவே இருந்த ஆலயம் பழைமையானதால், 90 கோடி செலவில் கருங்கல் ஆலயம் அமைக்கப்படவுள்ளது.ஆலயத்தின் மூலாலய அடிக்கல்லை ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரன் சுவாமிகள் நாட்டி வைத்தார்.

கல்யாண வேலவன் என அழைக்கப்படும் பொலிகண்டி கந்தவனம் வேலவனின் திருப்பணி வேலைகளை தமிழ்நாடு வை.கார்த்திகேய ஸ்தபதி முன்னெடுக்கிறார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்