தென்னிலங்கையில் தந்தையும் சிறிய தந்தையும் இணைந்து 15 வயதுச் சிறுமியை சீரழித்த கொடூரம்..!!

15 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அவரது தந்தையும், சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.காலி – யக்கமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான குறித்த சிறுமி தனது பாட்டியின் வீட்டில் வசித்து வரும் நிலையில், பல முறை இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியின் தந்தையும், தாயும் சட்டரீதியாக பிரிந்து வாழும் நிலையில், அவர் பாட்டியின் வீட்டிலும், அவரின் சகோதரர் தந்தையுடனும் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.தாய் கொழும்பில் தொழில் செய்து வருகிறார்.

சிறுமி பாட்டியின் வீட்டில் வசித்து வரும் வேளையில் அவரது சிறிய தந்தையால் முதன்முதலில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.பின்னர் அவரது தந்தையும், அவரை பல முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உறவினரான சகோதரி ஒருவர் இது தொடர்பில் தாயிடம் தெரியப்படுத்திய பின்னர் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பின்னர் சிறுமியின் தந்தையும், சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்