24 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் இருந்தால் இந்த அதிசயம் நடக்குமாம் …!! பலருக்கும் தெரியாத ஆய்வு முடிவுகள்…!

எந்நேரமும் சாப்பாட்டை பற்றி நினைப்பவர்களை 1 நாள் முழுக்க சாப்பிடாமல் வைத்திருந்தால் என்னவாகும் என்று ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல ஆச்சரிய முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் அதிக பட்சமாக எத்தகைய வேறுபாடுகள் உடலில் உண்டாகும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விரதம்:

நம்ம ஊரில் பல பெண்கள் இந்த வார்த்தைக்கு பேருபெற்றவர்கள். காரணம் செவ்வாய் கிழமை ஒரு விரதம், வெள்ளி கிழமை ஒரு விரதம், புதன் கிழமை ஒரு விரதம் இப்படி பல விதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.விரதம் இருப்பது நல்லது தான், என்றாலும் இது போன்ற அனாவசிய விரதங்கள் தேவை இல்லாத ஒன்று.

முதல் 8 மணி நேரம்:

24 மணி நேரத்தில் உங்களின் உடலில் நடக்க கூடிய மாற்றங்களை நாம் பிரித்து பிரித்து பார்ப்போம். முதல் 8 மணி நேரம் நம் உடல் மிக எளிதாக இந்த விரத நிலையை தாங்கி கொள்ளும்.இந்த 8 மணி நேரம் வரை, கடைசியாக நீங்கள் சாப்பிட்ட உணவை வயிறு செரிமானிக்கும். அதே போல இரத்தமும் சீராக தனது வேலைகளை செய்யும்.

அடுத்த 8 மணி நேரம்:

இதுவரை நீங்கள் விரதமே இல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு அடுத்த 8 மணி நேரத்திற்கு பசி எடுக்க ஆரம்பித்து விடும். எதையாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி விடும். இப்போது உங்களின் வயிறு தனக்கான உணவை கேட்க தொடங்கும்.

உடல் எடை:

பலருக்கும் இந்த சந்தேகம் இருக்க தான் செய்யும். அதாவது, இது போல 1 அல்லது 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையுமா?

குறையாதா? உண்மை என்னவெனில், இவ்வாறு இவ்வாறு செய்வதால் உடலில் கலோரிகள் குறையும். மேலும், இது உங்களின் உடலில் சில கிலோ வரை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

இதயம் 24 மணி நேரம் வரை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகாது. மேலும்,சர்க்கரை நோய் போன்ற அபாயங்களும் குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன.

எச்சரிக்கை

இந்த 24 மணி நேர சேலன்ச் எல்லோருக்கும் உரியது கிடையாது. சில குறிப்பிட்டவர்களின் உடலில் இந்த முறை பாதிப்புகளை உண்டாக்கி விடும்.

முக்கியமாக சர்க்கரை நோய்கள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோர் இந்தப் பயிற்சியை செய்யக் கூடாது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்