தேசிய இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி சாதனைப் பயணத்தை முன்னெடுத்த மாற்றுத் திறனாளியின் பயணம் வெற்றிகரமான நிறைவு..!!

இலங்கை முழுவதுக்குமான சாதனைபயணத்தை முன்னெடுத்திருந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி இன்று தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் கடந்த 01.02.2019ஆம் திகதி வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி தனது முச்சக்கர சைக்கிள் வண்டியில் சாதனை பயணத்தை ஆரம்பித்திருந்தார். தேசிய சுதந்திர தினத்தையொட்டி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக ஒற்றுமையையும், இன நல்லுறவையும் வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுக்கும் வகையில் அவர் இப்பயணத்தை முன்னெடுத்திருந்தார்.இந்நிலையில், அவர் வவுனியாவில் இன்று காலை தனது சாதனை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளரான றிப்கான் பதியுதீனால் முச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்