வடக்கில் புதிதாக நியமனம் பெற்ற தாதியர்கள் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பு…!

வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் தாதியர் சேவையின் தரம் – 03 இற்கான நியமனக்கடிதங்கள் நேற்று சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் 103 தாதிய உத்தியோகத்தர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி. திருவாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.இத் தாதிய உத்தியோகத்தர்களில் 30 பேர் யாழ் மாவட்டத்துக்கும், 16 பேர் கிளிநொச்சி மாவட்டத்துக்கும், 17 பேர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், 12 பேர் மன்னார் மாவட்டத்துக்கும், 28 பேர் வவுனியா மாவட்டத்துக்கும் நியமனம் செய்யப்பட்டனர்.இவர்கள் தமக்குரிய வைத்தியசாலைகளில் கடமைகளை இன்று பொறுப்பேற்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்