கனடாவில் மர்மான முறையில் உயிரிழந்த 11 வயதுச் சிறுமி…!! பொலிஸாரால் தந்தை கைது..!

பிராம்டனில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரம்ப்டனில் உள்ள இருந்து ரியா ராஜ்குமார் என்ற சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து 41 வயதுடைய குறித்த சிறுமியின் தந்தை ரூபேஷ் ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை 3 மணியளவில் அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனை அடுத்து 6:30 மணியளவில் குழந்தை மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையினால் சிறுமி உயிரிழந்தநிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் மரணத்தில் தந்தைக்கு தொடர்பு இருப்பதாக கருதிய பொலிஸார் ரூபேஷ் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்