தொடரூந்து சாரதியின் சமயோசிதமான செயற்பாட்டினால் யாழில் இன்று தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து….!! மயிரிழையில் தப்பிய உயிர்கள்…!!

இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி காலை 6.10 மணிக்கு புறப்பட்ட உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்துள்ளார். ரயில் சாரதி திடீரன ரயிலின் வேகத்தை குறைத்து திடீரென கடவை கதவுக்கு அண்மையில் ரயிலினை நிறுத்தினார். வாகனங்கள் சென்று 10 நிமிடங்கள் பின்னரே ரயில் சென்றது.

இது குறித்து கடவை காப்பாளரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்