வடக்கு தமிழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…. ! தலைமன்னார் -தமிழகம் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்…!!

தலைமன்னாரிலிருந்து தமிழகத்திற்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கும் போது;

‘மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்கள் ஒரு சுற்றுலா மையமாக அமைய இருக்கின்றது. இதனடிப்படையில், தலை மன்னார் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து தமிழகத்திற்கான கப்பல் சேவையை ஆரம்பிக்க இருக்கின்றோம்.இந்த நாட்டை நாம் அபிவிருத்தியில் முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆகவேதான் இந்த நாட்டிலுள்ள வடக்கையும் எப்படி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம் இந்த நாட்டிலே ஒரு முக்கியமான பிரதேசம். யுத்தத்துக்கு பின்னர் வடக்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.தெற்குப் பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்வதற்காக கப்பல்துறையை அபிவிருத்தி செய்கின்றோம். இத்துறையையும் தொழில்துறையையும் நாங்கள் அபிவிருத்தி செய்வதற்கு பல அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான பாரிய அபிவிருத்திகளை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்’ எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்