மட்டு மண்ணிலிருந்து தனது பக்தர்களுக்கு அருள் பொழியும் திருவருள் மிகு சகாய மாதா…!!

சகாய அன்னை திருத்தலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்

இலங்கைத் திருநாட்டிலே சதா சகாய அன்னையின் பெயரால் நிறுவப்பட முதலாதவது யாத்திரை ஸ்தலமாக ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயம் வரலாற்றில் பெருமை கொள்கின்றது.கிழக்கிழங்கையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் ஆயித்தியமலை என்னும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமத்தில் சகாய அன்னை திருத்தலம் அமைந்துள்ளது.மட்டு நகரிலிருந்து வலையிறவு வவுணதீவு ஊடாக 17 kmகளும் மட்டு நகரிலிருந்து செங்கலடி பதுளை வீதி கரடியனாறு ஊடாக 28 km தொலைவில் ஆயித்தியமலை சகாய அன்னை திருத்தலம் அமைந்துள்ளது.

வருடாவருடம் பெருவிழாவிற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன,மத பாகுபாடின்றி இவ் திருத்தலத்திற்கு வருகை தருவர்.மட்டு நகரிலிருந்தும், செங்கலடியிலிருந்தும் மத,இன பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் கல்நடையாக வந்து தங்கிநின்று அன்னையினை வணங்கி செல்வது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.பெருவிழா திருப்பலி தமிழிலும், சிங்களத்திலும் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.இலங்கை அரசினால் யாத்திரை ஸ்தலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதம் முதல் ஞாயிறு பெருவிழா கொண்டாடப்படுகின்றது.இவ் திருத்தலத்தில் காணப்படும் சகாய அன்னையின் திருவுருவப்படம் வல்லமைமிக்கதாகவும்,சக்தி வாய்ந்ததாகவும்,புதுமைகள் மிக்கதாகவும் அனைவருக்கும் காட்சியளிக்கின்றது.

அடுத்தமாதம் இவ் திருத்தல பெருவிழா ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்